About Us

Higher Power Foundation

(குடி போதை மற்றும் மனநல சிகிச்சை மையம்) மறுவாழ்வு மையம்

About Us

ஹையர் பவர் பவுன்டேஷன் (குடி போதை மற்றும் மனநல சிகிச்சை மையம்)மறுவாழ்வு மையம் 2019 அக்டோபர் மாதம் 8-ம் தேதி நிறுவப்பட்டது.

அன்று முதல் தொடர்ந்து குடி போதை மற்றும் மனநல சேவைகளை வெற்றிகரமாக வழங்கி வருகிறது.

 

இம்மையம் விழுப்புரம் மாவட்டம் இராமையன்பாளையம் கோலியனூரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில் இயங்கிவரும் குடிஃபோதை மற்றும் மனநல சிகிச்சை மைய பிரிவில் ஹையர் பவர் பவுன்டேஷன் முற்றிலும் மாறுபட்டு இயற்கை சூழலுடனும், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடம் என மாற்றத்திற்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் இயங்கி வருகிறது.

 

நன்கு அறியப்பட்ட இந்நிறுவனம் உள்ளூர் மற்றும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வரும் குடி  போதை  மனநல நோயாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு நிறுத்த இடமாக செயல்படுகிறது.

 

ஹையர் பவர் பவுன்டேஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.S.இளையராஜா M.A., செயலாளர் திருமதி. ஐ.மதியா அவர்களது முழுமையான சேவையை போன்றே நோயாளிகளின் வளர்ச்சியே முக்கியமானது, என்ற நம்பிக்கை இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முழு தூணாக நிற்கிறது.

 திரு. S.இளையராஜா M.A., அவர்கள், குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து, அதிலிருந்து மீள நினைக்கும் ஆண்களுக்கான சிகிச்சை மையத்தை அமைத்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் தேவையான சரியான மீட்பு வழிமுறைகளை அளித்து வெற்றி படிகளை அடையச் செய்வதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

இந்த சிகிச்சையானது, குடி மற்றும் போதை பழக்கத்தினால் அவதியுறும் குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மிக நேர்த்தியான முறையில் கையாளும் வழிகளையும் பொதுநல சிகிச்சை

மூலமாகவும்  மனநல   சிகிச்சை  மற்றும்  ஆலோசனைகள் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கல்வி மற்றும் பயிற்சி மட்டுமல்லாமல் திரு. S.இளையராஜா M.A., அவர்கள் சொந்த வாழ்ககையிலேயே ஏற்பட்ட அனுபவத்தினை பயின்று தான்பட்ட துயரம் மற்றவர்களுக்கு ஏற்படகூடாது என்பதற்காக, தனது கசப்பான கடந்த கால அனுபவத்தை வைத்து சேவை புரிந்து வருகிறார்.

 

ஹையர் பவர் பவுன்டேஷன் எனும் சிகிச்சை மையத்தின் மூலம் குடிஃபோதை நோயால் பாதிக்கும் இளைய தலைமுறையை காக்க எளிதான முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இப்பழக்கம், பாதிக்கப்பட்டவர்களை மட்டுமன்றி அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கிறது. இதனால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள அவர்களைப் போல் பாதிக்கப்பட்ட ஒருவரால் மட்டுமே உதவு முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தின் மூலமாக சேவை புரிந்து வருகிறார்.

 

இங்கு நோயாளிகளுக்கு மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினருக்கும் குடும்ப நல ஆலோசனை வழங்கப்படுகிறது. மருந்து மற்றும் வலிநிவாரணி மருந்துகள் போன்ற சில வவைகளில் ஆரம்பித்தது பின்பு போதை மாத்திரைகள் முதல் போதை பொருட்களுக்கும் அடிமையாகின்றனர்.

 குடி மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மீள நினைக்கும் நபர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் ஹையர் பவர் பவுன்டேஷன் எனும் சிகிச்சை மையத்தை அனுகி பயன் அடையலாம். இங்கு தனிநபர் ஆலோசனை, குடும்பநல ஆலோசனை,மருத்துவம், சத்தான உணவு தங்கும் இடம் விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி, 24×7 கேமரா கண்காணிப்பு வசதிகளும் உண்டு.

சிகிச்சை முறை

Detoxification  – நச்சு நீக்குதல்

Therapy  – ஆலோசனை

Follow-up      – பின்தொடர்தல்

  • மது ஃ போதை இரசாயனங்களை உடலிலிருந்து வெளியேற்றும் சிகிச்சை
  • மருத்துவ பரிசோதனைக்கான ஆய்வுக்கூடம்.
  • மருத்துவர்கள் பரிசோதனை செய்தல்.
  • 24ஃ7 செவிலியர்கள் கண்காணிப்பு
  • மனநல பயிற்சி (யோகா, உடற்பயிற்சி)
  • பிரச்சனைகள் பற்றிய கல்வி வகுப்புகள்
  • தனிநபர் ஆலோசனை வழங்குதல்
  • குடும்ப நல ஆலோசனை வழங்குதல்
  • குழந்தைகளின் பாதிப்பு பற்றிய ஆலோசனை
  • மன அழுத்தத்திற்கான ஆலோசனை
  • உள் நோயாளி சேவை
  • குழு ஆலோசனை செய்தல்
  • மையத்தின் உள்ளேயே யுயு பகிர்வு கூட்டம்
  • சத்தான உணவு வழங்குதல்
  • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
  • சுத்தமான சமையல் அறை ஃ சாப்பிடும் அறை உள்ளது
  • சிகிச்சையின் போதே யுயுஃேயு நண்பர்கள் தொடர்பினை ஏற்படுத்தி தருதல்.
  • 24ஃ7 கண்காணிப்பு கேமரா வசதி உள்ளன
  • உள் விளையாட்டு மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் உள்ளது.

இந்த நிறுவனம் விரிவான சிகிச்சைக்கான  ஒரு உதாரணமாக

இருக்கும், மேலும் ஆழ்ந்த அறிவையும் கூடுதல் அனுபவத்தையும் வெளிப்படுத்தும், நாங்கள் புதிய அறிவுரை மற்றும் தந்திரத்தை (வுTechniques) தருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது, யாரெல்லாம்

இந்த நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்

இயல்பு நிலைக்கு செல்ல இந்த சிகிச்சை மையம் உதவும்.

Meet our team

Our Professional Team

What we Offer

Our Programs